ஒன்ராரியோ மாநிலத்தில் ரூச் ரிவர் தொகுதிக்கான முன் வாக்குப்பதிவு ஆரம்பமாகியது! தமிழர்கள் பெருமளவில் வாக்களிப்பு.
கனடாவின் ஒன்ராரியோ மாநிலத்தில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் ரூச் ரிவர் தொகுதிக்கு ஒன்ராரியோ பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வதற்காக நடைபெறும் இடைத்தேர்தலின் முன்கூட்டிய வாக்குப்பதிவு 20ஆம் நாள் சனிக்கிழமை ஆரம்பமாகியது.
செப்டம’பர் 1ஆம் நாள் வியாழக்கிழமை நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்பாக முன் கூட்டி வாக்களிக்க விரும்புபவர்களுக்கு வசதியாக ஆகஸ்ட் 20ஆம் சனிக்கிழமை முதல் வரும் ஆக்ஸ்ட் 26ஆம் நாள் வெள்ளிக்கிழமை வரை முன் கூட்டிய வாக்குப்பதிவு நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 8 மணிவரை வாக்களிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ் வேட்பாளர்கள் நீதன் சான் புதிய சனநாயகக்கட்சி சார்பிலும், பிரகல் திரு ஆளும் லிபரல் கட்சி சார்பிலும் போட்டியிடுவது தமிழ் வாக்காளர்கள் இடையே அதிகரித்த உற்சாகத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் தமிழர் அரசியல் பலத்தை தமிழர் ஒருவருக்கு வாக்களித்து வெளிப்படுத்துங்கள் என தமிழர் தரப்பில் இருந்து வெளியிடப்படும் அறைகூவல் தமிழ் மக்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளதாகவும் எமது நிருபர் தெரிவிக்கின்றார்.
முதல் நாளிலேயே பெருமளவில் தமிழ் மக்கள் வாக்ளித்துள்ளதாகவும் ஏனையவர்களும் வரும் நாட்களில் வாக்களிக்க உள்ளதாகவும் அறியப்படுகின்றது. 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் வாக்காளர்கள் இத்தொகுதியில் வாழ்வதாகவும் சொல்லப்படுகிறது. வாக்காளர்களுக்கு என அனுப்பி வைக்கப்பட்டுள்ள வாக்காளர் அட்டையில் முன் கூட்டியே வாக்களிக்கக்கூடிய நிலையங்களின் முகவரிகள் உண்டு என தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. வாக்களிப்பின் போது காட்டவேண்டிய ஆவணங்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக உதவியோ தகவலோ வேண்டுபவர்கள் 647-479-4249 என்ற தொலைபேசி இலக்கத்தில் நீதன் சான் தேர்தல் அலுவலகத்துடனோ அல்லது 416-274-1435 என்ற தொலைபேசி இலக்கத்தில் பிரகல் திரு தேர்தல் அலுவலகத்துடனோ தொடர்பு கொள்ளலாம் என அவ்வலுவலகங்களைச் சேர்ந்தோர் தெரிவித்தனர்.
முன்கூட்டிய வாக்களிப்பு நிலையங்களின் விபரங்கள் வருமாறு
Mary Shadd Public School, 135 Hupfield Trail, ScarborouM1B 4R6
Saturday August 20 – Thursday August 25
Polls open 10am – 8pm
White Haven Junior Public School, 105 Invergordon Avenue, Scarborough M1S 3Z1
Saturday August 20 – Thursday August 25
Polls open 10am – 8pm
Albert Campbell Collegiate, 1550 Sandhurst Circle, Scarborough M1V 1S6
Monday August 22 – Friday August 26
Polls open 10am – 8pm
Malvern Family Resource Centre, 90 Littles Road, Scarborough M1B 5E2
Monday August 22 – Friday August 26
Polls open 10am – 8pm
– See more at: http://www.canadamirror.com/canada/68237.html#sthash.qQiPnZ3b.dpuf