கனடிய முதல் அமைச்சர்கள் ஒட்டாவாவில் ஒன்று கூடுகின்றனர்.
ஒட்டாவா-கால நிலை குறித்த விவாதங்களிற்காக கனடாவின் முதல் அமைச்சர்கள் இன்று ஒட்டாவாவில் ஒன்று கூடுகின்றனர்.
ஆனால் இவர்களது சந்திப்பில் சுகாதார பராமரிப்பு பழங்குடியினரின் பிரச்சனைகள் மற்றும் சர்வதேச அரசியலும் முக்கியத்துவம் வகிக்குமென அறியப்படுகின்றது.
இம்மகாநாடு ஆரம்பத்தில் ஒரு தேசிய காலநிலை மாற்றம் குறித்ததாக அமைய இருந்தது. ஆனால் பழங்குடியின தலைவர்கள் ஏற்கனவே தாங்கள் பிரதான மேசைக்கு அழைக்கப்படுவதில்லை என அதிருப்தி குரல் கொடுத்துள்ளனர்.
அதற்கு பதிலாக தனது மாகாண மற்றும் பிராந்திய சகாக்களுடன் அமர முன் அனைவரும் ஒரு முன்-கூட்டம் ஒன்றில் பங்கு கொள்வர்.
நீண்ட கால சுகாதார ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட ட்ரூடோவை நம்பவைக்க முயற்சிப்பதற்காக முதல் அமைச்சர்கள் அனைவரும் தங்கள் சொந்த செயல் திட்டங்களை வைத்திருப்பர். தற்சமயம் ஒட்டாவா வழங்க முன்வந்துள்ள சுகாதார இடமாற்றங்களிகான அடிப்படை 3சதவிகித அதிகரிப்பை குறைவானதென தெரிவித்து முதல்வர்கள் எதிர்த்துள்ளனர்.
இச்சந்திப்பில் முதல் அமைச்சர்கள் ஒரு விசேட விருந்தினரையும்-யு.எஸ்.துணை அதிபர் ஜோ பிடென்- சந்திப்பார்கள். யு.எஸ்.புதிய அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பின் குடியரசு கட்சியின் நிர்வாகத்தில் கனடா-யு.எஸ். உறவு குறித்த பேச்சுக்களும் இடம்பெறும்.