ஐ-பேடை விட குறைவான எடையில் பிறந்த அதிசயக் குழந்தை
ஐக்கிய அமீரகத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஐ-பேடை விடவும் குறைவான எடையில் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
ஐக்கிய அமீரகத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஐ-பேடை விட குறைவான எடையில் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த அதிசயக் குழந்தையின் எடை வெறும் 631 கிராம்தான். வெற்றிகரமாக பிரசவம் முடிந்து குழந்தை பிறந்ததை மருத்துவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர்.
இதுகுறித்து மருத்துவர் குழு தலைவர் கோவிந்தா ஷெனாய் கூறுகையில், ‘‘அந்த அதிசய குழந்தை 26.5 வாரங்கள் கருவில் இருந்து பின்னர் பிரசவமானது. மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் குழந்தை உள்ளது.
குழந்தையை பிரசவம் செய்த நேரம் தான் மிகவும் முக்கியமானது. ஏனெனில் அப்போது அந்த தாய் மிகவும் அபாயகரமான சூழலில் இருந்தார். பிரசவ வலி வந்து மருத்துவமனைக்கு வந்தபோது அவருக்கு அதிக ரத்த அழுத்தம் இருந்தது.
தாயும், குழந்தையும் தற்போது மிகவும் குறிப்பிடத்தக்க அளவிற்கு குணமடைந்துள்ளனர். தற்போது குழந்தையின் எடை 2.05 கிலோவாக அதிகரித்துள்ளது. குழந்தை மிகவும் நன்றாக உள்ளது. குழந்தையை காப்பாற்றியதற்காக மருத்துவர்களுக்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்’’ என்றார்.