ஐ.நா மனிதவுரிமை சபையின் சில நிகழ்வுகளின் பதிவுகள்
கடந்த 6ம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள ஐ.நா மனித உரிமை சபையின் 34வது கூட்டத் தொடரில் தொடர்ந்து பல தரப்பட்ட நிகழ்வுகள் இலங்கையில் இருந்து வருகை தந்திருந்தவர்களினாலும், புலம்பெயர் வாழ் பிரதிநிதிகளினாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த 13ம் திகதி சர்வதேச பெண்கள் சங்கத்தினால், நடாத்தப்பட்ட பக்க நிகழ்வில், பாலஸ்தீனம் மேற்கு சாகாரா காஷ்மீர் ஆகிய போராட்டங்களில் பெண்கள் மீதான வன்முறைகள் பற்றி உரையாடப்பட்ட வேளையில், தமிழீழத்தில் நடைபெறும் பெண்கள் மீதான வன்முறைகள் குறித்து. தமிழர் மனித உரிமைகள் மையத்தின் சர்வதேச இயக்குநர் திருமதி டியேற்றிமக் கோணாலினால் உரையாற்றியிருந்தார்.
நடைபெற்றுவரும் கூட்டத் தொடரில் பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் யைம், பிரித்தானியா தமிழர் பேரவை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிகள் போன்ற பல அமைப்புக்களைச் சார்ந்த பலர் கலந்து கொண்டு தமிழீழ மக்களின் அரசியல், பொருளாதார சமூக நிலைமைகள் குறித்து உரையாற்றிவருகின்றனர்.
நேற்று புதன்கிழமை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் கூட்டப்பட்டிருந்த கூட்டத்தில், தமிழீழ மக்களது நிலைகள் பற்றி பிரான்ஸ் தமிழர் மனிதவுரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி. கிருபாகரன் எடுத்துரைத்திருந்தார்.
இலங்கை பற்றிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை எதிர்வரும் 22ம் திகதி புதன் கிழமை சபையில் உத்தியோகபூர்வமாக உரையாடப்படவுள்ளது.
இதேவேளை, “ சுயநிர்ணய உரிமையும் போராட்டமும் “ என்ற தலைப்பில் நடைபெற்ற பக்கக் கூட்டத்தில், தமிழர் மனித உரிமை யைத்தின் பிரதிநிதி டியேற்றி தமிழீழ மக்களின் சுய நிர்ணயம் பற்றி ஓர் நீண்ட உரையை ஆற்றியிருந்தார்.
இன்று வியாழக்கிழமை பிரபலியமான மனித உரிமைகள் மனிதாபிமான செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும், இக்பால் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் – யஸ்மீன் சூக்கா, சேரின் சேவியர், பிலபல சட்ட வல்லுநர்களான கலோஸ் கஸ்ரோசான, பியஸ் பூ ஆகியோர் சவர்தேச சட்டங்கள் பற்றியும் அவற்றின் தாக்கங்கள் பற்றியும் உரையாற்றியதுடன், இலங்கையில் காணாமல் போனவர்கள் பற்றியும் வவுனியாவில் உள்ள சித்திரவதை முகாமான ஜோசப் முகாம் பற்றியும் உரையாற்றினார்.
இக் கூட்டத் தொடரில் இலங்கையின் பிரதிநிதி ரவீந்திரநாத் ஆரியசிங்கா மற்றும் பிபிசியின் முன்னாள் செய்தியாளர் பிரான்ஸிஸ் கரிசன் ஆகியொர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.