ஐ.நா பாதுகாப்பு சபையில் கனடா இணைவதற்கு சேர்பியா ஆதரவு!
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றத்தில் கனடா தற்காலிக உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்ள, சேர்பியா ஆதரவு தெரிவித்துள்ளது.
2020ஆண்டுக்கு தேர்வாகவுள்ள ஐ.நா பாதுகாப்பு மன்றத்தின் உறுப்பினர்கள் பட்டியலில் கனடாவும் இணைய முனைப்பு காட்டி வருகின்றது.
இந்நிலையில், கனடாவின் இந்த முயற்சி பாதுகாப்பு மன்ற உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்வதும் மிக முக்கிய இலக்காக கருதப்படும் நிலையில், சேர்பியா சிறிய நாடாக இருந்தாலும் அதன் இந்த ஆதரவு மிக முக்கிய விடயமாக கருதப்படுகிறது.
அதுமட்டுமின்றி 17 ஆண்டுகளுக்கு முன்னர் கனடா சேர்பியாவுடன் போரில் ஈடுபட்ட நிலையில், தற்போது அந்த நாடு கனடாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளமை முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் திருப்பமாக நோக்கப்படுகிறது.