ஐ.நாடுகள், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் விக்கியை சந்திக்கவுள்ளனர்!
ஐக்கிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இந்த வாரத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனை சந்திக்கவுள்ளனர்.
இதன் நிமித்தம் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டங் லாய் மார்க்வ் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை வடக்குக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அவருடன் ஐக்கிய நாடுகளின் வதிவிட இணைப்பாளர் உனா மெக்கௌலியும் விக்னேஸ்வரனை சந்திக்கவுள்ளார்.
வவுனியாவில் தமது அமைப்புக்களின் நிதியுதவிகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்களை இதன்போது இருவரும் பார்வையிடவுள்ளனர்.
அத்துடன் கனகராயன்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான பொலிஸ் நிலையத்தை அவர்கள் திறக்கவுள்ளனர். இதனைதவிர அவர்கள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுக்கும் செல்லவுள்ளனர்.