ஐம்பது வாக்களிப்பு நிலையங்களில் இன்று வாக்குப்பதிவு – 10 ஆயிரம் தமிழர்கள் வாக்களிப்பார்களா?
ருச் ரிவர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்களிப்பு இன்று வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 9 மணிவரை நடைபெறவுள்ளது. இதற்காக தொகுதி முழுமையாக 50 வாக்களிப்பு நிலையங்கள் திறந்திருக்கும்.
வாக்காளர்களுக்கு என அனுப்பி வைக்கப்பட்டுள்ள வாக்காளர் அட்டையில் இவர்கள் வாக்களிக்க வேண்டிய வாக்களிப்பு நிலைய முகவரியுள்ளதாக தேர்தல் ஆணையகம் தெரிவித்தது.
18 வயதிற்கு மேற்பட்ட இத் தொகுதியில் வாழும் கனடிய குடியுரிமை பெற்ற அனைவரும் வாக்களிக்கும் தகுதி பெற்றுள்ளனர். உரிய ஆவணங்களைக் காட்டி அவர்களும் வாக்காளர் அட்டை வரவில்லை என்றாலும் வாக்களிக்கலாம்.
12 ஆயிரத்திற்கும் மேல் தமிழ் வாக்காளர்கள் உள்ள இந்தத் தொகுதியில் இன்னும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு இன்றே வாக்கயளிக்க கிடைத்த இறுதி சந்தர்ப்பமாகும். இவ்hகள் பெருமளவில் இன்று தமிழ் வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிக்கவில்லை என்றால் தமிழ் பாராளுமனற் உறுப்பினர் ஒருவர் தெரிவாவது சிக்கலாகலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக உதவியோ தகவலோ வேண்டுபவர்கள் 647-479-4249 என்ற தொலைபேசி இலக்கத்தில் நீதன் சான் தேர்தல் அலுவலகத்துடனோ அல்லது
416-274-1435 என்ற தொலைபேசி இலக்கத்தில் பிரகல் திரு தேர்தல் அலுவலகத்துடனோ தொடர்பு கொள்ளலாம் என அவ்வலுவலகங்களைச் சேர்ந்தோர் தெரிவித்தனர்.
இத்தொகுதியில் வாழும் ஒரே ஒரு முக்கிய வேப்பாளரான புதிய சனநாயகக்கட்சி வேட்பாளர் நீதன் சான் முன் கூட்டிய வாக்குப்பதிவில் ஏற்கனவே வாக்களித்து விட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தேர்தல் முடிவடைந்து குறுகிய நேரத்திலேயே தேர்தல் முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.