ஐபோன் 6 ஆல் இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!
அவுஸ்திரேலியாவில் நபர் ஒருவர் ஐபோனுடன் தவறி விழுந்ததில், எதிர்பாராதவிதமாக போன் வெடித்து படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் ,சிட்னி நகரை சேர்ந்தவர் கரீத் க்ளீயர்(36), இவர் வழக்கம் போல தனது பின் பாக்கெட்டில் ஐபோன் 6 போன் வைத்து, இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
பின்னர் இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே இறங்க முற்படும் போது தவறி விழுந்துள்ளார். இதனிடையே அவரது பின்பாக்கெட்டில் வைத்திருந்த ஐபோன் 6 திடீரென தீப்பிடித்துள்ளது, அதை பாக்கெட்டில் இருந்து வெளியே கரீத் எடுப்பதற்குள் வெடித்து விட்டது.
இதனால் அவரது தோல் பகுதிகள் காயமடைந்தது, உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். அவருக்கு மருத்துவமனையில் தீவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இது குறித்து ஆப்பிள் நிறுவனத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.