இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தாண்டிற்கான ஐபிஎல் போட்டி இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ்காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது.
முதல் ஆட்டத்தில் ராயல்செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.
இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய சண்டை இது தான் என்று சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகளும் மோதின.
இப்போட்டியின் 17 வது ஓவரின் நான்கவது பந்தை மிட்சல் ஸ்டார்க், கிரன் பொல்லார்டுக்கு வீசினார். அந்த பந்து பொல்லார்டின் தலைக்கு மேலே சென்றது.
அப்போதே இருவருக்கும் வாக்குவாதம் ஆனது. அதன் பின்னர் அடுத்த பந்தை ஸ்டார்க் வீச வந்த போது, பொல்லர்டு துடுப்பெடுத்தாடாமல், விலகிக்கொண்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ஸ்டார்க் பந்தை கோபமாக கீப்பரிடம் வீச, பதிலுக்கு பொல்லார்டு பேட்டை வீச வீரர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றியது.
அதன் பின் நடுவர் இருவரையும் சமாதானப்படுத்தினர். இருப்பினும் ஓவர் நிறைவடைந்தவுடன் கோஹ்லியும், பொல்லார்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதில் பொல்லார்டு கோஹ்லியின் கழுத்தை பிடித்து இழுத்த போது, அவர் சமரசம் ஆகாமல், கோபத்துடனே சென்றார்.
தற்போது இந்த வீடியோ ஐபிஎல் வரலாற்றில் நடந்த மிகப்பெரிய சண்டை என்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.