இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-4 என்று ஆஸ்திரேலியா இழந்துள்ள நிலையில், அடுத்த ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில் வலுவான ஒப்பந்தங்களை எதிர்நோக்குவதால் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய வீரர்கள் மீது ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடவில்லை என்று அதிரடி மன்னன் சேவாக் அதிரடி கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, “அடுத்த ஆண்டு பெரிய அளவில் ஐபிஎல் ஏலங்கள் உள்ளன, இதனால் அவர்கள் பயந்து விட்டார்கள். இந்திய வீரர்களை அவர்கள் ஸ்லெட்ஜ் அல்லது வசை பாடியிருந்தால் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அதிக விலை கொடுத்து ஒப்பந்திப்பதற்கு யோசிப்பார்கள். ஸ்லெட்ஜிங் செய்யாததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
மேலும் ஆஸ்திரேலிய அணியில் தற்போது முன்பிருந்தது போல் கிரேட் பிளேயர்கள் இல்லை. வார்னர், ஸ்மித், பிஞ்ச் ஆகியோரை அந்த அணி அதிகமாக நம்பியிருக்கிறது” என்றார் சேவாக்.