ஏழு வருடங்கள் கடந்த போதிலும் துயிலும் இல்லத்தை தேடி வந்த சிங்கள குடும்பம்
நாளைய தினம் இடம்பெற இருக்கும் மடு தேவாலய உற்சவத்திற்காக இன்று வருகைத் தந்திருந்த குடும்பத்தார் அயல் கிராமமாகிய பெரிய பண்டி விரிச்சானுக்கு சென்று அங்கு முன்பிருந்த துயிலும் இல்லத்தை தேடியுள்ளனர்.
2009ஆம் ஆண்டுக்கு முன்னர் மடு ஆலயத்திற்கு வரும் சிங்கள மக்கள் பெரும்பாலானவர்கள் ஆலயத்தில் இருந்து ஒன்றரை கிலோமீற்றருக்கு அப்பால் அமைந்திருந்த பெரிய பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தை பார்வையிட்டு செல்வது வழக்கம்.
யுத்தத்தின் பின்னர் அந்த மாவீரர் துயிலும் இல்லம் இலங்கை இராணுவத்தால் முற்றாக அளிக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஆலயத்திற்கு வந்த சிங்கள மக்கள் மாவீரர் துயிலும் இல்லத்தை தேடிவந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.
தற்போது மேற்படி துயிலுமில்லம் அழிக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் கடந்த நிலையிலும் சிங்கள மக்கள் மாவீரர் துயிலும் இல்லத்தை தேடி வருவது ஆச்சரியத்துக்குரிய விடயமாகும்.