10 ஆவது ஐ.பி.எல் போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது. இதில் பிரபல வீரர்கள் இருப்பதால் அனைத்து ரசிகர்களாலும் விரும்பி பார்க்கப்படுகின்றது.
இதில் நியூசிலாந்து வீரர் பிரண்டன் மெக்கல்லம் , குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இவரது, பேட்டை ஏலம் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்தார்.
இந்த பேட்டை, கிறைஸ்ட்சர்ச் நகரை சேர்ந்த தொழிலதிபர் ரே கோப்லாண்ட் என்பவர், சுமார் 7.75 லட்சத்திற்கு ஏலம் எடுத்திருந்தார்.
இவ்வாறு பெறப்பட்ட பணத்தினை, சமீபத்தில் குதிரை பந்தயத்தின் போது தவறி விழுந்து உயிரிழந்த நியூசிலாந்து நாட்டின் பெண் ஜாக்கியான ரேபெக்காவின் குடும்பத்திற்கு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.