எரிபொருட்களுடன் சென்ற பார ஊர்தி தீப்பற்றியதில் ஒருவர் உயிரிழப்பு
மொன்றியல் நகரில் எரிபொருட்கள் ஏற்றிச் சென்ற பார ஊர்தி ஒன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) தீப்பற்றி எரிந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பரபரப்பான நேரத்தில் இடம்பெற்ற இந்த தீச் சம்பவத்தினால் மேலும் நான்கு வாகனங்களும் தீப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தின் போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
சுமார் 100ற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பலமணிநேரம் போராடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீரென ஏற்பட்ட இந்த தீச் சம்பவத்தினால் குறித்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிப்பதுடன் நெடுஞ்சாலை போக்குவரத்துக்கு தடைசெய்யப்படடுள்ளது