இப்படத்தை வருகிற மே 5-ந் தேதி ரிலீஸ் செய்யப்போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், கடந்த வாரம் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் ‘பாகுபலி-2’ படத்திற்கு கிடைத்திருக்கிற வரவேற்பால், இந்த வாரமும் அந்த படமே அதிக திரையரங்குகளை ஆக்கிரமிக்கக்கூடும்.
எனவே, இதை கருத்தில் கொண்டு ‘எய்தவன்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் மேலும் ஒரு வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளனர். அதன்படி, வருகிற மே 12-ந் தேதி இப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தை பிரெண்ட்ஸ் பெஸ்டிவல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.