‘என்.ஹெச்10’ ரீமேக்: த்ரிஷா உடன் பேச்சுவார்த்தை
தமிழில் ரீமேக்காக இருக்கும் ‘என்.ஹெச் 10’ படத்தில் அனுஷ்கா சர்மா கதாபாத்திரத்தில் நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு.
இந்தியில் நவ்தீப் சிங் இயக்கத்தில் அனுஷ்கா சர்மா இயக்கத்தில் வெளியான படம் ‘என்.ஹெச் 10’. இப்படத்தை அனுராக் காஷ்யப், விகாஸ் பாகல், அனுஷ்கா சர்மா, சுனில் லுல்லா என 6 தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
2015-ம் ஆண்டு வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படம் தமிழில் ரீமேக்காக இருக்கிறது. இப்படத்தில் அனுஷ்கா சர்மா கதாபாத்திரத்தில் நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு.
இந்த ரீமேக்கை புதுமுக இயக்குநர் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் முறையாக அறிவிக்க இருக்கிறது படக்குழு.