என்னடா இது விஜய்க்கு மட்டும் வரும் சோதனை- கிளம்பிய சர்ச்சை
விஜய் படம் என்றாலே எங்கிருந்து தான் வருவார்களோ? பிரச்சனை செய்ய வேண்டும் என்று. அந்த வகையில் தற்போது படத்தின் தலைப்பே அறிவிக்கவில்லை, அதற்குள் பிரச்ச்னை வெடித்துவிட்டது.
விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார், இந்த படத்திற்கு இன்னும் தலைப்பே வைக்கவில்லை. எங்கள் வீட்டு பிள்ளை என்று தலைப்பு வைக்கலாம் என யோசித்து வருகின்றனர்.
ஆனால், அதற்குள் எம்.ஜி.ஆர் பொதுநல சங்கம் சார்பாக இந்த தலைப்பை வைக்க கூடாது, என விஜய் வீட்டின் முன்பு வரும் 14ம் தேதி போராட்டம் நடத்தவுள்ளார்களாம்.
இதற்காக முறைப்படி போலிஸாரிடம் அனுமதி வாங்க மனு கொடுத்துள்ளனர்.