கேரள நடிகர் சங்கத்தில் நடந்த பொதுக்குழுவில், ‘கேரளாவில் நடிகைகள் யாரும் பாலியல் கொடுமைக்கு ஆளாவதில்லை…’ என்று, கருத்து வெளியிட்டிருந்தனர். இதற்கு, நடிகை மஞ்சுவாரியர் தலைமையில் இயங்கி வரும், ‘கலெக்டிவ் வுமன் இன் சினிமா’ என்ற நடிகையர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ‘நடிக்க வாய்ப்பு தேடி வரும், புதுமுக நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர்; ஆதிக்க மனம் படைத்தோரின், அதிகார துஷ்பிரயோகம் கேரளாவில் தான் அதிகம் உள்ளது…’ என்று எதிர்குரல் கொடுத்துள்ளனர்.