எதிரணி வீரரின் கழுத்தை நெரித்த பிரபல வீரர்! கமெராவில் சிக்கிய அதிர வைக்கும் காட்சி
ஐரோப்பா லீக் தொடர் ஆட்டத்தின் போது மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணி நட்சத்திர வீரர் இப்ராஹிமோவிக் மைதானத்தில் வைத்து எதிரணி வீரரின் கழுத்தை நெரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பா லீக் தொடரில் இஸ்தான்புலில் நடந்த மான்செஸ்டர் யுனைடெட், Fenerbahçe அணிகள் இடையேயான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் தோல்வியடைந்தது.
ஆட்டத்தின் 30வது நிமிடத்தின் போது மான்செஸ்டர் அணியில் Paul Pogba-வுக்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக ஸ்வீடன் நட்சத்திரம் இப்ராஹிமோவிக் களமிறங்கினார்.
மிகவும் பதட்டமாக விளையாடிய இப்ராஹிமோவிக், களத்தில் வைத்து Fenerbahçe வீரர் prior Kjaer கழுத்தை நெரித்துள்ளார்.
பின்னர் நடுவர் இருவரையும் தடுத்த போது தன்னை தொட வேண்டாம் என நடுவருக்கே எச்சரிக்கை விடுத்துள்ளார் இப்ராஹிமோவிக்.
இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டடுள்ளது. தற்போது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் பலர் இப்ராஹிமோவிக்கின் செயலை கடுமையாக விமர்ச்சித்து வருகின்றனர்.