கண்டி நிருவாக மாவட்டத்தில் நேற்று மாலை முதல் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
திகன, தெல்தெனிய பிரதேசங்களில் ஏற்பட்ட பதற்ற நிலைமை காரணமாக இந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்று காலை 6.00 மணிக்கு இந்த ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டிருந்த போதிலும், விசேட பொலிஸ் அதிரடிப் படையினரின் பாதுகாப்பு தொடர்ந்தும் அப்பிரதேசத்திற்கு வழங்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.