உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடாத்துவதற்குத் தேவையான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹம்மட் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வாக்களிப்பு நிலையங்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் தற்பொழுது செயற்படுத்தப்படுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதத்தில் உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடாத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை ஆணைக்குழு முன்னெடுத்து வருவதாகவும், இது தொடர்பில் காணப்படும் பல சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.