உள்ளுராட்சிமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை 557 தேர்தல் விதிமுறை மீறல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி எமது செய்திச் சேவைக்கு இதனை தெரிவித்தார்.
இவற்றில் 94 முறைப்பாடுகள் தேர்தல் வன்முறைகள் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வன்முறைகளால் 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இன்றைய தினம் சில தேர்தல் அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.