இலங்கையின் கலக்கல் வேகப்பந்து வீச்சாளர் உள்நாட்டு ஒருநாள் போட்டி ஒன்றில் ஆஃப் ஸ்பின் வீசி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
300 ஒருநாள் போட்டி விக்கெட்டுகளைக் கடந்த மலிங்கா சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான இலங்கை தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை. மேலும் லாகூரில் நடந்த 3-வது டி20 போட்டிக்கு அங்கு செல்ல மறுத்த வீரர்களில் மலிங்காவும் ஒருவர். இதனையடுத்து டி20 தொடர் முழுதிலும் மலிங்கா ஆடமுடியாமல் போனது.
இந்நிலையில் உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட்டில் ஏ-டிவிஷன் நாக் அவுட் போட்டியில் தீஜே லங்கா என்ற அணிக்கு கேப்டனாக ஆடிய லஷித் மலிங்கா, கொழும்புவில் எல்பி.பைனான்ஸ் என்ற அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் ஆஃப் ஸ்பின் வீசியது பலருக்கும் ஆச்சரியமளித்தது.
குறைந்த ஓட்டத்தில் விக்கெட் கீப்பர் ஸ்டம்புக்கு அருகில் நிற்க மலிங்கா ஆஃப் ஸ்பின் வீசி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
மழை எப்போது வேண்டுமானாலும் வரக்கூடும் என்பதால் வேகமாக ஓவர்களை முடிக்க அவர் ஆஃப் ஸ்பின்னை தேர்ந்தெடுத்தார். இதனால் இவர் அணி டக்வொர்த் முறையில் 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தீஜே லங்கா அணி 38.4 ஓவர்களில் 266/4 என்று ரன் குவிக்க எல்.பி.பைனான்ஸ் அணி 25 ஓவர்களில் 125/7 என்று முடிந்தது, இதனையடுத்து மலிங்கா அணி தீஜே லங்கா 82 ரன்களில் வெற்றி பெற்றது.
ஒருமுறை 1996 உலகக்கோப்பையில் ஜெயசூரியா எங்கு போட்டாலும் வெளுத்துக் கொண்டிருந்த போது மனோஜ் பிரபாகர் ஆஃப் ஸ்பின்னுக்கு மாறியது நினைவிருக்கலாம்.