பிரான்ஸ் உள்துறை அமைச்சகத்தினதும், உள்துறை அமைச்சர் ஜெரார் கொலோம்பினதும், அதிகாரபூர்வப் பேசவல்லவராக (porte-parole), Frédéric de Lanouvelle நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பெயரிலேயே செய்தியைக் கொண்டுள்ள (Lanouvelle) இவர், TF1 தொலைக்காட்சியில் 7 à 8 என்ற நிகழ்ச்சியை ஒரு வருடகாலம் நடாத்தி, பின்னர் 9 வருடங்கள் BFM TV யின் பிரபல ஊடகவியலாளராகப் பணி புரிந்துள்ளார்.
38 வயதுடைய Frédéric de Lanouvelle, சவால் மிக்க இந்தப் புதிய பணி மிகவும் பிடித்துள்ளதாகவும், இந்த கௌரவத்தை வழங்கிய உள்துறை அமைச்சரிற்கு நன்றி தெரிவிப்பதாகவும், தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இவர் அன்றாடம் அமைச்சகத்தின் செய்திகளை ஊடகங்களிற்கு வழங்குவார்.
இவரிற்கு முன்னர் உள்துறை அமைச்சகத்தின் பேசவல்லராக இருந்த Pierre-Henry Brandet, TF1 தொலைக்காட்சியில் பணிபுரியச் சென்றுள்ளமையால், இந்தப் புதிய நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.