உலக சாம்பியன்ஷிப் கிண்ணத்தை திருடிய டிஸ்கோ பாய்: கமெராவில் சிக்கிய பரபரப்பு காட்சி
பிரித்தானியாவில் இடம்பெற்ற உலக டார்ட்ஸ் சாம்பியன்ஷிப் கிண்ணம் வழங்கும் நிகழ்வின் போது ரசிகர் ஒருவர் கிண்ணத்தை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Alexandra Palaceல் இடம்பெற்ற இறுதி சுற்றில் Gary Anderson வீழ்த்தி Michael van Gerwen இரண்டாவது முறையாக கிண்ணத்தை கைப்பற்றினார்.
இந்நிலையில், வெற்றிப்பெற்ற Michael van Gerwenனுக்கு கிண்ணம் வழங்கும் நிகழ்வின் போது ரசிகர் ஒருவர் திடீரென மேடையில் நுழைந்து கிண்ணத்தை எடுத்துக்கொண்டு தலை மீது வைத்து ஓடினார்.
உடனே பாதுகாப்பு பாணியில் இருந்த அதிகாரிகள் அவரை பிடித்து கிண்ணத்தை மீட்டனர். இது அரங்கத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
குறித்த சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலாக இச்செயலில் ஈடுபட்ட நபர் இணையத்தில் கிண்டல் வீடியோ வெளியிடும் Trollstation குழுவை சேர்நத டிஸ்கோ பாய் என்றழைக்கப்படும் லீ மார்ஷல் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதை உறுதிசெய்யும் வகையில் Trollstation குழுவினர், அவர்களின் டுவிட்டர் பக்கத்தில் டார்ட்ஸ் சாம்பியன்ஷிப் கிண்ணத்தை வென்ற டிஸ்கோ பாய்க்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.