உலக சாதனையை முறியடிக்க ரொறொன்ரோ பல்கலைக்கழக மாணவர்கள் இலக்கு!
கனடா-றயர்சன் பல்கலைக்கழக நிலை நோக்கு பங்கேற்பாளர்கள் பலர் ஒரே நேரத்தில் கம் உமிழ்ந்து குமிழ் வரச்செய்யும் நிகழ்வில் ஒரு உலகசாதனையை முறியடித்துள்ளனர்.
புதன்கிழமை 1203 பேர்கள் ஒரே நேரத்தில் ஒன்றாக சேர்ந்து குமிழ் ஊதுதல் நிகழ்வு இடம்பெற்றது.இரண்டு நிமிடங்களிற்கு மேலாக இடம்பெற்றது.
அதிகார பூர்வமான உறுதிப்படுத்தல் கிடைக்க ஒரு சில வாரங்கள் செல்லும்.ஆனால் 2014 செப்டம்பர் 27ல் மட்றிட் ஸ்பெயினில் 737 பேர்கள் அடித்த சாதனையை இவர்களது முறியடிக்கும் என கூறப்படுகின்றது.
சாதனையை முறியடிக்கும் இந்த முயற்சி டவுன்ரவுன் ரொறொன்ரோ பல்கலைக்கழக இலையுதிர் கால அரையிறுதி ஆரம்பமாவதற்கு சில நாட்களிற்கு முன்னதாக நடைபெற்றுள்ளது.
930 total views, 930 views today