பூமியிலிருந்து விண்வெளிக்கு அல்லது பூமியின் சுற்றுவட்டப் பாதைக்கு அனுப்பப்படும் ராக்கெட்டுக்கள் குறைந்தது மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும்.
குறிப்பிட்ட தூரங்களைக் கடக்கும்போது அப் பகுதிகள் ஒவ்வொன்றாக பிரிந்து இறுதியில் ஒரு பகுதி மட்டும் இலக்கை நோக்கி செல்லும்.
பிரிந்த பகுதிகள் கழிவுகளாக பூமியை நோக்கி வரும் அல்லது விண்வெளியிலேயே தங்கி மாசுக்களை ஏற்படுத்தும்.
இதனைத் தடுப்பதற்காக பிரிவடையும் பாகங்களைக் கொண்டிராத தனியான ஒரு பகுதியை மட்டும் கொண்ட ராக்கெட்டினை தயாரிக்கும் முயற்சி இடம்பெற்று வருகின்றது.
மெக்ஸிக்கோவை தளமாகக் கொண்டு இயங்கும் ARCA Space Corporation நிறுவனம் இதனை தயாரித்து வருகின்றது.
இவ் வகை ராக்கெட்டினை ஒவ்வொரு முறை செலுத்துவதற்கும் 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பூமியின் சுற்றுவட்டப் பாதையை சென்றடைவதற்கு இவ் வகை ராக்கெட்டுக்கள் பூமியிலிருந்து செலுத்தப்படும்போது 29,000 km/h என்ற வேகத்தில் செலுத்தப்பட வேண்டும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.