உலகின் மிக நெரிசலான சிறைச்சாலை!
மணிலா, குயிசான் நகர சிறையில் கைதிகளின் அதிகரிப்பால், உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு நெரிசலில் சிக்கி, கைதிகள் தவிக்கின்றனர். போதிய பொருளாதார வசதியின்றி நிர்வாகமும் திண்டாடுகிறது.
பட்டியில் அடைக்கப்பட்ட பண்ணை விலங்குகளை விடவும் மோசமாக, ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தும் உரசிக்கொண்டும் நாட்களை கடினமாக கடத்துகின்றனர். சுழற்சி முறையில் உறங்க கட்டயப்படுத்தப்படுகின்றனர்.
குற்றம் செய்யும் சிறை
இந்த செய்தியில் நாம் அதிர்ச்சியோடு பார்க்கும் சிறைச்சாலை படங்கள் 2016 ஜூலையின் மூன்றாவது வாரத்தில் எடுக்கப்பட்டதுதான்.
குயிசான் நகரின் சிறை 800 கைதிகளை அடைப்பதற்கான திட்ட அளவில் கட்டப்பட்டதுதான். ஆனால், இப்போது அங்கு 3,800 கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வரம்புகளை மீறுவது சிறைச்சாலை ஆனாலும், மனிதாபிமான கடமைகளில் ஒரு அரசு தவறுவதுதான்.
’ரேமுண்ட் நாரக் என்ற 20 வயது இளைஞன் ஒரு இளைஞனை கொன்ற குற்றத்திற்காக ஏழு ஆண்டுகள் இங்கு தண்டனை அனுபவித்து வந்தான். அதனால், அவனால் அங்குள்ள நிலையை சரியாக வெளியில் சொல்ல முடிகிறது.
ஒரு அறையில் நாரக் உட்பட 30 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். உணவாக கருவாடுதான் கொடுத்தார்கள். இங்கு முதல்நிலை பிரிவில் வந்தவர்களில் நான் இருந்தேன்’ என நாரக் முன்பு உள்ள நிலையை கூறுகிறார்.
கூட்டாட்சியை நோக்கும் தீர்வு
பிலிப்பைன்ஸ் அரசு, 2022 க்குள் புதிய அரசியல் அமைப்பு திருத்தத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி டுடெர்டி கூறுகையில், ’புறக்கணிக்கப்பட்டு வந்த சில மாகாணங்களில் வறுமையும் குற்றங்களும் அதிகரித்துள்ளன. அந்த மாகாணங்களுக்கும் அதிகாரம் மற்றும் செல்வம் பகிர்ந்தளிக்கப்பட்டால் நிலைமை சீர்படும்’ என்கிறார்.
ஹவுஸ் சபாநாயகர் பண்டலியன் அல்வரஸ் கூறுகையில், சில மாநில அரசுகளுக்கு மேலும் குறிப்பிட்ட அதிகாரத்தை வழங்குவதன் மூலம் வணிக நிச்சயமற்ற தன்மையை குறைத்து சரிசெய்ய முடியும். என்கிறார்.
வெறும் சிறைத் தண்டனையால் மட்டும் நாட்டில் குற்றங்களை குறைத்துவிட முடியாது என்பதற்கு மணிலா மாநிலமே முன்னுதாரணம்.
குற்றவாளிகள் அதிகரிப்பு, மக்கள் தேவைகளில் உள்ள குறைகளின் பிரதிபலிப்பு. அந்த தவறுக்கான முதல் குற்றவாளி ஆட்சியில் இருப்பவர்கள்தான்.
சிறைகளை அதிகரிப்பதும் அங்கு வசதிகளை ஏற்படுத்துவதும் தற்காலிக தீர்வாக இருக்கலாம். வறுமையை போக்குவதும் ஒழுக்கத்தை போதிப்பதுமே நிரந்தர தீர்வு.