இரண்டு நாள் அரச முறை பயணம் மேற்கொண்டு கட்டார் சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உள்ளிட்ட தூதுக் குழுவினர் இன்று (25) பிற்பகல் தோஹாவில் உள்ள இஸ்லாமிய தொல்பொருள் நிலையத்தை பார்வையிட்டனர்.
உலகில் உள்ள மிகப்பெரும் இஸ்லாமிய கலைப்படைப்புகளை கொண்ட தொல்பொருள் நிலையங்களில் தோஹா இஸ்லாமிய தொல்பொருள் நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையத்தில் உள்ள தொல்பொருள்களைப் பார்வையிடுவதற்காக வருடாந்தம் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.