உலகின் மிகச்சிறிய கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை வடிவமைத்து பிரிட்டன் விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் மிக நுண்ணிய கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையை வடிவமைத்து சாதனை படைத்துள்ளனர். பிரிட்டனில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடத்தில் இது தயாரிக்கப்பட்டது. 15 மைக்ரோ மீட்டர் நீளமும் 20 மைக்ரோ மீட்டர் அகலமும் கொண்டது. இந்த வாழ்த்து அட்டையில் சிலிகான் நைட்ரேட் பிளாட்டினம் பூசப்பட்டுள்ளது.
ஒரு தபால் ஸ்டாம்பினை விட இது 200 மில்லியன் சிறியது. இதற்கு முன் செய்யப்பட்ட சிறிய வாழ்த்து அட்டையை விட 100 மடங்கு சிறியதாகும். அந்த அட்டையில் பொம்மை ஒன்று வரையப்பட்டுள்ளது. அதனுள் மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து எழுதப்பட்டுள்ளது.
இது உலகின் மிகச்சிறிய கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை என உருவாக்கியவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தேசிய இயற்பியல் ஆய்வுக்கூட ஆராய்ச்சியாளர்கள் டாக்டர். டேவிட் கோக்ஸ் மற்றும் டாக்டர் கின் மிங்கர்ட் ஆகிய இருவரும் இணைந்து உருவாக்கி உள்ளனர்.