உலகப் பிரபலமான பெண் கைது!
உலகப் பிரபலமடைந்த ஆப்கான் பெண் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் அகதிகள் குறித்து 1984ம் ஆண்டு National Geographic இதழுக்காக பிரபல புகைப்பட நிருபர் மக்குர்ரே படம் எடுத்தார்.
அட்டைப் படத்தில் அச்சிடப்பட்டிருந்த புகைப்படத்தில், பச்சை நிற கண்களுடன் பெண் ஒருவர் இடம்பெற்றிருந்தார்.
உலகம் முழுவதையும் ஸ்தம்பிக்க வைத்த அந்த புகைப்படம், அகதிகள் படும் துயரங்கள், அவலங்களை பிரதிபலிக்கும் வண்ணம் இருந்தது.
இதன்பின்னர் 2002ம் ஆண்டு மீண்டும் மக்குர்ரே அவரை சந்தித்தார், அப்போது அந்த பெண்ணுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் இருந்தனர்.
தொடர்ந்து பாகிஸ்தானில் நிரந்தரமாக தங்கிவிட்டார், ஆனால் இவர் சட்டத்தை ஏமாற்றி பாகிஸ்தான் குடியுரிமையை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனையடுத்து போலி அடையாள அட்டையும் வலம் வந்ததாககூறி இவரை கைது செய்துள்ளனர்.
இவர் மட்டுமின்றி போலி அடையாள அட்டையுடன், அரசை ஏமாற்றி குடியுரிமை பெற்ற ஆப்கானிஸ்தான் அகதிகளையும் நாட்டை விட்டு வெளியேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.