உரியவரிடம் குழந்தையை தர மறுக்கும் குழந்தைகள் காப்பகம்!
கனடா நாட்டின் மனிடோபா மாகாணத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.
இதனால், அவர் தன்னுடைய பேரக்குழந்தையை அங்குள்ள வேறு காப்பகத்தில் தற்காலிகமாக விட்டு சென்றுள்ளார்.
பின்னர் அவர்களிடம் குழந்தையை திரும்ப கேட்ட போது அவர்கள் தர மறுத்து விட்டனர். இதை பற்றி அந்த பெண்மணி கூறுகையில், என் பேரனையும் அவன் தாயையும் சிறு வயது முதலே நான் தான் பார்த்து வருகிறேன். என் பேரனை அவர்கள் தர மறுக்கிறார்கள் . அவனுக்கென்று வீடு இருக்கும் போது அவன் ஏன் இங்கு கஷ்டபட வேண்டும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து குழந்தைகள் மற்றும் குடும்ப நல வாரிய தலைவர் டெப்பி பெசண்ட் கூறுகையில், பொதுவாக கேட்பாரற்று கிடக்கும் குழந்தைகள் காப்பகத்தில் பாதுகாப்பாக பராமரிக்கபடுவார்கள் அல்லது தக்க சான்றிதழ்களோடு வரும் வளர்ப்பு பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.
வருபவர்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களா என சோதனை செய்த பின்னரே குழந்தைகள் அவர்களிடம் தரப்படுவார்கள் என அவர் கூறியுள்ளார். இதனால் சீக்கிரம் அந்த குழந்தை உரிய முதியவரிடம் தரப்படும் என கூறியுள்ளனர்.
மனிடோபா மாகாணத்தில் 11000 க்கும் மேற்ப்பட்ட குழந்தைகள் காப்பகங்களில் இருப்பது குறிப்பிடத்தக்கது.