உயிருக்காக போராடும் பெண்!! ஒலிம்பிக்கில் நடந்த சோகம்..
ரியோ ஒலிம்பிக்கிற்காக சென்ற பெண் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் மலேரியா நோய்த்தாக்கத்திற்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தனது உயிருக்காக போராடி வருகின்றார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி பெண் தொகுப்பாளரான சார்லி வெப்ஸ்டரே இவ்வாறு மலேரியா நோயினால் பீடிக்கப்பட்டு கோமா நிலையில் ரியோடி ஜெனீரோவிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
33 வயதான சார்லி வெப்ஸ்டர் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி செய்திச் சேவையின் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்துள்ளார்.
தற்போது டீம் ஜிபி குழுமத்தின் தூதுவராக இருக்கும் சார்லி வெப்ஸ்டர் , கடந்த 6 ஆம் திகதி ஒலிம்பிக் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இங்கிலாந்திலிருந்து ரியோ டி ஜெனீரோவுக்கு சென்றிருந்தார்.
அங்கு ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட சார்லி வெப்ஸ்டர், அதன் பின் மலேரியா நோய்த்தாக்கத்திற்கு ஆளானார்.
நிகழ்ச்சி தொகுப்பாளினியான சார்லி வெப்ஸ்டர், தான் நோயினால் பீடிக்கப்பட்டுள்ள நிலையில் ரியோ டி ஜெனீரோவிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தரவேற்றியிருந்தார்.
இதேவேளை, இவருக்கு அருகில் தாயர் மற்றும் சகேதரர்கள் இருப்பதாகவும் பிரேசில், அமெரிக்க மற்றும் இங்கிலாந்து மருத்துவர்கள் குழு இணைந்து தரமான சிகிச்சைகளை மேற்கொள்வதாகவும் அவரது ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.