எட்மன்டனை சேர்ந்த ஆறு வயது சிறுவன் ஒருவன் அரிதான மற்றும் உயிர் அச்சுறுத்தலான நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டிருந்தான். பெரும்பாலான சிறுவர்கள் செய்யாத ஒரு சம்பவம் இவன் செய்துள்ளான்.அது என்னவென்றால் திருமணம் செய்து கொள்வது.
எட்மன்டனில் உள்ள ஹொட்டேல் ஒன்றில் அதிசயப்பெண்ணுடன் மூன்று முடிச்சுக்களை போட்டு கொண்டான்.
கடந்த யூலை மாதம் காட்சி ஒன்றில் அதிசயப்பெண்ணுடன் திருமண முன்மொழிதல் செய்து கொண்டதாக இவனது தாயார் தெரிவித்தார்.
இச்சம்பவத்தை இன்று செய்வதற்கு தங்களிற்கு இன்று சந்தர்ப்பம் கிடைத்ததெனவும் இல்லை என்றால் தங்கள் மகனின் விருப்பத்தை பூர்த்தி செய்ய வேறு சந்தர்ப்பம் கிடைக்காதெனவும் அவனின் தாயார் ஷனெல் ஸ்ரொம்பேர்க் தெரிவித்தார்.
ஜக்சன் ROHHAD எனப்படும் ஒரு அரியவகை குறை பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளான். இதன் காரணமாக நான்கு வயதாக இருக்கும் போது இவனது எடை 80-இறாத்தல்களாக இருந்தது. இந்த வயதின் சராசரி எடையை விட இரட்டிப்பான மடங்கு.
தற்போதைக்கு இந்த நோய்க்கு மருந்தெதுவும் இல்லை. இந் நோய் உள்ள சிறுவர்களில் 25சதவிகிதமானவர்கள் சுவாச செயலிழப்பினால் இறக்கின்றனரென யு.எஸ். சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.
ஜக்சனின் எடை தற்சமயம் 100-இறாத்தல்கள். சுவாசப்பிரச்சனைகள் ஏற்படதொடங்கிவிட்டதாக தாயார் தெரிவித்தார்.
மகன் என்ன செய்ய விரும்புகின்றான் என பட்டியல் தரும்படி தாயார் கேட்டுள்ளார். வைத்தியசாலையும் ஜக்சனிற்கு எந்த ஆதரவையும் வழங்க முடியாத நிலை. செயற்கை சுவாசம் வழங்கப்படுகின்றது.
திருமண சடங்கிற்கு ஜக்சனும் அவனது குடும்பத்தினரும் லிமொசினில் சென்றனர். இந்த நிகழ்விற்கு உள்ஊர் தனிப்பட்டவர்கள் மற்றும் வர்த்தக நிர்வாகிகள் உதவியுள்ளனர்.
கிட்டத்தட்டை 80-மக்கள் மத்தியில் ஜக்சன் பட்மானின் சைட்கிக் றொபின் a.k.a போன்று ஆடை அணிந்திருந்தான்.
முக நூலில் பதிவு செய்யப்பட்ட திருமண வீடியோவை கண்ணுற்ற பல மக்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.