உணவு பொருட்கள் சிலவற்றின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விலை குறைப்பானது இன்று (5) புதன்கிழமை இரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, உணவுப் பொதியொன்றின் விலை 25 ரூபாவினாலும். முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலைகள் 10 ரூபாவினாலும், தேநீர் ஒன்றின் விலை 5 ரூபாவினாலும் குறைக்கப்படவுள்ளதாகச் அச்சங்கம் தெரிவித்துள்ளது.