அடுத்த நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற்ப்பட்ட பின்னர் உணவுப் பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் உயர்வடைந்து வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மரக்கறி வகைகள் உட்பட, சந்தையில் தினமும் ஒவ்வொரு விலைக்கு உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக தேங்காய் ஒன்றின் விலை நூறு ரூபாக்கு விற்பனை செய்ய்ப்படுகின்றது. 50 முதல் 60 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு பிடி கிரை நூறு ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
வெங்காயம் கிலோ 400 ரூபா வரை விற்பனை செய்ய்ப்படுகின்றது. இவ்வாறு மரக்கறிகள் உட்பட சீனி, தேயிலை போன்ற உணவுப் பொருட்கள் நாளுக்கு நாள் விலைகளில் மாற்றங்கள் செய்யப்படுவதாக மக்கள் கூறுகின்றனர்.
இன்னும் சில நாட்களில் தேங்காய் நிறுத்து கிலோ அடிப்படையில் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் இதனால் இன்று முதல் வியாபார நிலையங்களில் தேங்காய் பதுக்கப்பட்டுள்ளது என்றும் மக்கள் முறையிட்டுள்ளனர்.
இது தொடர்பாக நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரி ஒருவருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, அரசாங்கம் நிர்ணயித்த விலைகளையும் விட கூடுதலாக விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டார்.
குறிப்பாக தேங்காய் விலை உயர்வுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் 70 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யக்கூடா என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது எனவும் அந்த அதிகாரி கூறினார்.
ஆனால் இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு மற்றும் புநகர் பகுதிகளில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பாட்டுள்ளது என்றும் சில வர்த்தக நிலையங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தேங்காய்கள் 90 ரூபாவுக்கு விற்பனை செய்ய்ப்படுவதாகவும் மக்கள் விசனம் தெரிவித்தனர்