ஷங்கர் 2.0 படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டார். தற்போது கிராபிக்ஸ் வேலைகளில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றார்.
இதற்கிடையில் பத்திரிக்கையாளர்களை 2.0 உதவி இயக்குனர் ஒருவர் தாக்கிய சர்ச்சையில் ஷங்கர் மாட்டி, பின் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டார்.
அதை தொடர்ந்து தற்போது வேறு ஒரு சர்ச்சையும் எழ, ஷங்கர் கடும் கோபத்தில் உள்ளார். எமி ஜாக்ஸனிடம் RK நகரில் பிரச்சாரம் செய்ய பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம்.
இதுக்குறித்து நம் தளத்தில் கூட தெரிவித்து இருந்தோம், இந்த செய்தி எப்படியோ ஷங்கர் காதிலும் விழுந்துள்ளது.
இதனால் மிகவும் கோபத்தில் உள்ளாராம், தன்னை நம்பி இவ்வளவு கோடி ஒருவர் செலவு செய்ய, யாரோ ஒருவர் செய்யும் தவறால், படத்தின் ரிலிஸில் பாதிப்பு வந்தால் என்னாவது? என கோபத்தில் உள்ளாராம்.