உங்களைக் காட்டிக் கொடுக்கும் ஸ்மார்ட்போன்
அப்படியானால் நீங்கள் பாதுகாப்பாக இல்லை என்கிறார்கள் துறை சார்ந்த நிபுணர்கள்.
உங்களை தனிநபர்கள் உளவு பார்க்கலாம், அரசுகளும் வேவு பார்க்கலாம் என்பதை இணையப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
ஊடுருவி வேவுபார்க்கும் நிறுவனங்கள்
உளவு பார்க்க விரும்புபவர் NSO Group என்ற இஸ்ரேலிய நிறுவனத்திற்கு பணம் செலுத்தினால் போதும்.
நீங்கள் ரைப் செய்யும் ஒவ்வொரு எழுத்தையும், உங்கள் போனில் கேட்கும் ஒவ்வொரு சத்தத்தையும், உங்கள் இருப்பிடத்தையும் அறிந்து கொள்ள முடியும்.
இந்த நிறுவனம் வழங்கும் உளவு பார்க்கும் கருவிகள், உங்களது செயற்பாடுகளை ரகசியமாக பதிவு செய்யும் கருவியாக ஸ்மார்ட் போனை மாற்றும்.
இது மாத்திரமன்றி வேறு பல நிறுவனங்களும் உளவு பார்க்கும் தொழில்நுட்பத்தை விற்பதாக தெரியவந்துள்ளது.
அரசுகளின் கைங்கர்யம்
NSO Group உளவு பார்த்த நபர்களின் பட்டியல் பெரியது. இவர்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மனித உரிமை ஆர்வலரது ஐபோனும் அடங்கும். மெக்ஸிக்கோ அரசின் ஊழல்களை அம்பலப்படுத்திய ஊடகவியலாளரும் வேவு பார்க்கப்பட்டுள்ளார்.
இந்த நிறுவனம் உலகெங்கிலுமுள்ள எத்தனையோ அரசுகளுக்கு தொழில்நுட்பத்தை விற்பனை செய்ய முயன்றிருக்கிறது. பொலிஸ் அமைப்புக்களும் இதன் சேவையைப் பெற்றுள்ளன.
இன்று அப்பிள், பேஸ்புக், கூகிள் போன்ற நிறுவனங்கள் தரவுகளை Encryption முறையில் சங்கேதக் குறியீடுகளாக மாற்றுகின்றன. இதன் நோக்கம், அரச நிறுவனங்களிடம் இருந்து வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பது தான்.
மென்பொருளில் இருந்த சிறிய குறைபாட்டைப் பயன்படுத்தி, அப்பிளை ஊடுருவும் அளவிற்கு நிறுவனம் ஆற்றல் படைத்ததாக இருக்கிறது. அத்தகைய நிறுவனங்கள் உங்களையும் வேவு பார்ப்பது அப்படியொன்றும் கஷ்டமான விஷயம் அல்ல.