உக்ரேன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையிலான மோதல் 110 ஆவது நாளாகவும் தொடர்கிறது.
இந்த மோதலில் இரு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர்.
இந்நிலையில், குறித்த மோதலில் வட கிழக்கு உக்ரேனிய நகரமான கார்கிவில் கண்மூடித்தனமான ஷெல் மற்றும் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்தி ரஷ்யா நூற்றுக்கணக்கான பொதுமக்களைக் கொன்றதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
ரஷ்யப் படைகள் 9N210/9N235 கிளஸ்டர் குண்டுகள் மற்றும் சிதறக்கூடிய வெடிமருந்துகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளது.