ஈழத்தமிழர்கள் பற்றிய சேரன் பேச்சுக்கு சீமான் பதிலடி
அதில், சேரன் கூறியதாவது, புதிய தமிழ் சினிமாக்களை ஆன்லைனில் ஏற்றி சினிமாவுக்கு எதிரியாக இருப்பது ஈழத்தமிழர்கள்தான். அவர்களுக்காகவா நாம் போராட்டம் நடத்தினோம் என்று நினைத்தால் அருவருப்பாக உள்ளது, என்று கூறினார்.
இது குறித்து சீமான் அளித்துள்ள பேட்டியில், கன்னாபின்னா படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் சேரன் ஈழத்தமிழர்கள் குறித்து கூறி கருத்தை கேட்டவுடன் மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
அவர் அப்படிப் பேசியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சேரன் இதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.