ஈராக்கில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டனர் என குற்றம் சாட்டப்பட்ட 38 பேருக்கு நேற்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஈராக்கில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட 38 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். அவர்கள் தெற்கு ஈராக்கின் நசிரியா நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க முடிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து ௩௮ பேருக்கும் சிறைச்சாலையில் நேற்று துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த செப்., 25ல் 42 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதற்கு பின்னர் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் நேற்று தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது.