ஈராக்கின் பொருளாதார சீர்திருத்தத்திற்கு கனடா நிதியுதவி
மத்திய கிழக்கு நாடுகளின் தற்போதைய மற்றும் நீண்டகால தேவைகள் குறித்து இன்று புதன்கிழமை வொஷிங்டனில் முக்கிய கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் சிதைந்து போயுள்ள ஈராக்கின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு கனடா முன்வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
24 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கும் இந்த மாநாடு, ஈராக்கின் நீண்டகால ஸ்திரத்தன்மை மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான தொகையை 2 பில்லியன் டொலருக்கும் அதிகமானதாக்கும் நோக்கில் நடைபெறவுள்ளது.
இவற்றில், கனடாவினால் 200 மில்லியன் டொலர் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான அறிவிப்பு கடந்த செவ்வாய்க்கிழமை கனேடிய அரசால் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஈராக்கிய அரசின் பொருளாதார சீர்திருத்தங்களுக்காக 200 மில்லியன் யூரோ வழங்குவதான கனடாவில் உறுதி மொழி நிறைவேற்றப்படும் என்று கருதப்படுகின்றது.