இஸ்ரேலுடன் யுத்தநிறுத்தத்தில் ஈடுபடும் நிலையில் உள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே இதனை தெரிவித்துள்ளார்
யுத்தநிறுத்தத்தை நோக்கி நெருங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலுடன் யுத்தநிறுத்தத்தை நோக்கி நெருங்கியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் 7ம் திகதி ஹமாசினால் பிடிக்கப்பட்ட பணயக்கைதிகளை விடுதலை செய்வதற்கான முயற்சிகள் தீவிரமாக இடம்பெறுகின்ற நிலையிலேயே ஹமாஸ் இதனை தெரிவித்துள்ளது.
பணயக்கைதிகள் விடுதலைக்கான முயற்சிகளில் கட்டார் தீவிரமாக ஈடுபட்டுள்ளது – கட்டாரில் ஹமாசின் அரசியல் அலுவலகம் உள்ளதும் ஹனியே கட்டாரில் வசிப்பதும் குறிப்பிடத்தக்கது.
சில சிறிய விவகாரங்கள் காரணமாகவே பணயக்கைதிகள் விடுதலை தாமதமாவதாக கட்டார் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பணயக்கைதிகள் விவகாரத்தில் இணக்கப்பாட்டை நெருங்கிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதியும் தெரிவித்துள்ளார்.