பிரிட்டன் இளவரசர் திருமணத்திற்கு 2,600 பொதுமக்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுபிரிட்டன் இளவரசர் ஹரி, அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லேவை திருமணம் செய்கிறார். இவர்களின் திருமணம் வரும் மே 19ம் தேதி நடக்கிறது. எலிசபெத் ராணியின் வின்ட்சர் காஸ்டில் இல்லத்தில் இத்திருமணம் நடக்கிறது. இந்த திருமணம் உலகளவிலான கவனத்தை ஈர்த்துள்ளது..
இந்த திருமண விழாவில் கலந்து கொள்ள 2,640 பொது மக்களுக்கு மணமக்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இவர்களின் அறக்கட்டளை சார்ந்தவர்கள் தம்பதியராக கலந்தகொள்கின்றனர். மேலும், பள்ளி மாணவ மாணவிகள், உள்ளூர் மக்கள் மற்றும் உலகளவில் 1,200 பேர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.உலகளவிலான தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், விருந்தினர்கள் பங்கு பெறும் இந்த ராஜ குடும்ப திருமணத்தை சாதாரண பொதுமக்கள் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதர திருமணங்களை போல் தங்களது திருமணமும் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மணமக்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.