இலங்கை வீரரை புத்திசாலித்தனமாக வீழ்த்திய பீட்டர் நிவில்
இலங்கை வீரர் கருணரத்னேவை தனது புத்திசாலி தனத்தால் வீழ்த்திய அவுஸ்திரேலியா அணியின் விக்கெட் கீப்பர் பீட்டர் நிவில் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலியா அணி இலங்கையில் சுற்று பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட்போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இத்தொடரில் அவுஸ்திரேலியா அணி தொடரை இழந்தது.
இந்நிலையில் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய மூன்றாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடைபெற்றது.
அப்போட்டியின் 14 வது ஓவரை அவுஸ்திரேலியா சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் வீசினார். அதை இலங்கை அணியின் இடது கை ஆட்டக்காரரான கருணரத்னே தனது மட்டையால் தடுக்காமல் விக்கெட் கீப்பருக்கு விட்டுவிட்டார்.
கீப்பர் நிவில் பந்தை தனது அணியின் வீரர்களுக்கு தருவதற்குள், கருணரத்னே அசாதரணமாக கீரிஸை விட்டு காலை மேலே தூக்கினார். இதை கவனித்த பீட்டர் தன்னுடைய புத்திசாலி தனத்தால், ஸ்டம்பின் பைசை மட்டும் தனியாக தூக்கிவிட்டு அவுட் என முறையிட்டார். அது டிவி ரீப்ளேயில் அவுட் என தரப்பட்டது.
இதைக் கண்ட சில கிரிக்கெட் பிரபலங்கள் பீட்டர் நிவிலின் செயல்பாடு, டோனியை போன்றே உள்ளது என கருத்து தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.