இன்று (08) நள்ளிரவு முதல் பணிபகிஷ்கரிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் அறிவித்துள்ளது.
2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சார சபை சட்டத்தை (2013 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலம் திருத்தப்பட்டது) திருத்துவதற்காக 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்ட சட்டமூலத்திற்கு எதிராக இந்த பணிபகிஷ்கரிப்பை மேற்கொள்ளப்படுவதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.