இலங்கை மக்கள் ஒற்றுமையாக வாழ முடியாமைக்குரிய காரணத்தை கண்டு பிடித்தார் வடக்கு ஆளுநர்
இலங்கை என்ற சிறிய நாட்டுக்குள் மக்கள் அனைவரும் இனம், மதம் என வேறுபாடுகளை காட்டாமல் ஒற்றுமையாக வாழ இயலாமைக்கு காரணம் என்ன, பிரச்சினை எங்கே இருக்கின்றது என ஆராய்ந்தால் மக்களுடைய மனங்களிலேயே அந்த பிரச்சினை இருந்து கொண்டிருக்கின்றது என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் வீட்டுக்குள் தமிழர்- சிங்களவர்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். ஆனால் வெளியேதான் தமிழர்- சிங்களவர் இடையில் பிரச்சினை காணப்படுகின்றது.
நாட்டில் தற்போதுள்ள அமைதியான சந்தர்ப்பத்தை பாதுகாப்பதற்கு அனைத்து மக்களும் பொறுப்புடன் செயற்படவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
“நல்லிணக்க செயற்பாட்டிற்கான மக்கள் விதந்துரைகள்” தொடர்பிலான வடகிழக்கு தேசோதய சபைகளின் விதந்துரைகளை வெளியிடும் நிகழ்வு இன்றைய தினம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையில் எவருடைய இரத்தமும் சுத்தமானது, தனித்து வமானது இல்லை. குறிப்பாக தமிழர்கள்- சிங்களவர்களின் இரத்தம் கூட கலந்தே இருக்கின்றது.
இலங்கை என்ற சிறிய நாட்டுக்குள் இனம், மதம் வேறுபாடு இல்லாமல் சகல மக்களும் ஒற்றுமையாக வாழ முடியாமல் இருக்கின்றமைக்கு காரணம் இந்த நாட்டில் உள்ள மக்களுடைய மனங்களில், அவர்களின் மூளையில் உள்ள குற்றமேயாகும்.
அத்தகைய குற்றங்களை களையவேண்டும். நாட்டை அபிவிருத்தி செய்வதில் எந்தவொரு பிரச்சினையும் உள்ளதாக நான் காணவில்லை.
மக்களின் மனங்களிலும், மூளையிலும் உள்ள குற்றங்களை க ளைவதே பெரும் பிரச்சினையாக இருக்கின்றது.
தற்போதும் இலங்கையில் தமிழர்களும்- சிங்களவர்களும் முரண்பட்டு கொண்டே இருக்கின்றார்.
ஆனால் இலங்கையில் எவருடைய இரத்தமும் சுத்தமாக இல்லை. தமிழர்- சிங்களவர்களின் இரத்தமும் ஒன்றோடு ஒன்றாக கலந்தே இருக்கின்றது.
நாட்டில் பல தலைவர்கள் இன, மத பேதங்களை கடந்து சN காதர இன மக்களுடன் திருமணங்களையும், உறவுகளையும் பேணி வருகின்றனர்.
வடமாகாண முதலமைச்சரின் வீட்டுக்குள் தமிழர்- சிங்களவர் பிரச்சினை இல்லை. ஆனால் வெளியேதான் பிரச்சினை காணப்படுகின்றது.
நாட்டில் தற்போது உருவாகியிருக்கு ம் சாந்தியையும், சமாதானத்தையும் நாங்கள் பொறுப்போடு பாதுகாக்க வேண்டும் என்றார்.