இலங்கை பெண்கள் ஹொக்கி அணியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தேவதாஸ் கிருஷாந்தினி இடம்பெறுகின்றார்.
இந்தோனேஷியாவில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டு விழா 2022 பெண்கள் ஹொக்கி தகுதிகாண் சுற்றில் பங்குபற்றிவரும் இலங்கை அணியில் முக்கிய வீராங்கனையாக கிருஷாந்தினி இடம்பெறுகின்றார்.
ஆனால், முற்றிலும் எதிர்பாராத சம்பவம் காரணமாக கிருஷாந்தினி மன அழுத்தம் மற்றும் கவலைக்குள்ளானதால் கம்போடியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியில் அவரால் விளையாட முடியாமல் போனது.
மிகவும் திறமை வாய்ந்த வீராங்கனையான கிருஷாந்தினி, சிங்கப்பூருக்கு எதிரான இன்றைய போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்ப்பதாக இலங்கை ஹொக்கி சங்கத்தின் செயலாளர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
மேலும் இலங்கை பெண்கள் ஹொக்கி அணியில் இடம்பெறும் முதலாவது யாழ். மங்கை என்ற பெருமையை கிருஷாந்தினி பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.