இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் தெளிவாக உள்ளது! பான் கீ மூன்
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை தெளிவான கொள்கையை கொண்டிருக்கிறது.
இதனைபல அறிக்கைகளின் ஊடாக அது தெரியப்படுத்தியுள்ளது என்று ஐக்கிய நாடுகள் செயலாளரின்உதவிப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
உதவிப் பேச்சாளர் பர்ஹான் ஹக், இது தொடர்பில் நேற்று ஊடகவியலாளர் ஒருவரின்கேள்விக்கு பதிலளிக்கும் போது எவரும் இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் நிலைப்பாடுகுறித்து அறிக்கைகளை வெளியிடலாம்.
எனினும் ஐக்கிய நாடுகள் சபை தமது அறிக்கைகளின் மூலம் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டைதெளிவுபடுத்தி வருகிறது என்று குறிப்பிட்டார்.
அண்மையில் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய நாடுகளின்பொதுச்செயலாளர் பான் கீ மூனை சந்தித்த பின்னர், இலங்கை ஜனாதிபதி அலுவலம்வெளியிட்ட அறிக்கை தொடர்பான கேள்வி ஒன்றின் போது பர்ஹான் ஹக் தமது கருத்துக்களைவெளியிட்டுள்ளார்.