இலங்கையில் ஏற்படவுள்ள வான்முட்டும் அதிசயம்! ஆச்சரியத்தில் உலக நாடுகள்
இலங்கையின் உயரமான கட்டிடம் என்றால் கொழும்பில் உள்ள 40 மாடியிலான உலக வர்த்தக மையமே நினைவிற்கு வரும்.
இதேபோன்று நான்கு மடங்கு உயரமான கட்டிடம் ஒன்று உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாம் நினைத்து கூட பார்க்க முடியாத மிக உயரமான கட்டிடம் ஒன்று இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ளது.
2017ஆம் ஆண்டில் நிர்மாணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு ஆயத்தமாகும் WCC அல்லது World Capital Centre என்ற கட்டிடம் தொடர்பிலான தகவல்களே தற்போது வெளியாகியுள்ளது.
625 மீற்றர் கொண்ட இந்த கட்டிடத்தில் 117 மாடிகள் நிர்மாணிக்கப்படவுள்ளது. இலங்கையின் உயரமான கட்டிடம் என கூறப்படும் உலக வர்த்தக மையத்தின் நீளம் 152 மீற்றராகும்.
அதேபோன்று தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரம் 350 மீற்றராகும். அதனை தவிர கொழும்பில் ஆங்காங்கே நிர்மாணிக்கப்படும் அல்லது நிர்மாணிப்புகளை ஆரம்பித்துள்ள அனைத்து கட்டிடங்களுமே 300 மீற்றர் நீளத்திற்குள் நிறைவடைகின்றது.
அப்படி என்றால் இந்த 625 மீற்றரிலான WCC கட்டிடம் எவ்வளவு பெரியதென தற்போது சிந்தித்துக் கொள்ள முடியும்.
அதேபோன்று WCC கட்டடம் உலகின் மிகப்பெரிய நிலப்பரப்பை கொண்ட கட்டிடமாகும். WCC கட்டிடம் 800,000 சதுர அடியாகும். கோபுரமாக பார்த்தால் உலகின் அதிக சதுர அடிகளை கொண்ட கட்டிடம் இந்த WCC கட்டிடமாகும்.
கட்டி முடித்த பின்னர் இலங்கையின் மிகப்பெரிய கட்டிடமாக மாறும் WCC கோபுரம், உலகின் உயரமான கட்டிடங்களில் 9வது இடத்தை பிடித்துக் கொள்ளும்.
முழு உலகிற்கும் தெரியும் வகையில் இலங்கை வானில் ஏறும் இந்த கட்டிடம் இலங்கையின் பொருளாதார கேந்திர நிலையமாக மாற்றமடையும்.
முழுமையான கொழும்பு நகரம் போன்று கடலும் அழகாக தெரியும் வகையில் நிர்மாணிக்கப்படுகின்ற WCC கோபுரத்தில் 7 நட்சத்திர ஹோட்டல், வீட்டுத்தொகுதிகள் மற்றும் வணிக வளாகங்கள் உட்பட பொருளாதார கேந்திர நிலையத்திற்கு அவசியமான அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கும்.
வங்கிகள், கல்வி நிறுவனங்கள், மாநாட்டு மண்டபங்கள், பொழுதுபோக்கு இடங்கள் போன்றவைகளுக்காக 50 பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள WCC கோபுரத்தின் உள் 3000 கடைகளை கொண்ட இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக மையமும் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.