இலங்கையில் ஆபத்தான செயல்களில் குழந்தைப் பணியாளர்கள் செயற்பட்டு வருவதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இலங்கையில் தற்போதைய மதிப்பீட்டின் படி குழந்தைகள் எண்ணிக்கையில் நூற்றுக்கு 4 சதவீதம் அளவில் குழந்தைப் பணியாளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு பணியாளர்களாக செயற்படும் குழந்தைகளில் நூற்றுக்கு 2.3 சதவீதம் பொருளாதார பணியாளர்களாக காணப்படுவதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
அத்துடன் 1.8 சதவீதமானவர்கள் ஆபத்தான செயல்களில் ஈடுபடும் குழந்தைப் பணியாளர்களாக செயற்படுவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.